ஆயிரம் கவி சொன்னேன்... வைரமுத்துவின் அம்மா பாடல்... எஸ்.பிபி குரலில் இதமாய் நாட்படு தேறல் 2

நாட்படு தேறல் 2 வைரமுத்து எழுதியுள்ள அம்மா பாடல் வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்படு தேறல் 2 வைரமுத்து எழுதியுள்ள அம்மா பாடல் வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ளது. ஆயிரம் கவி சொன்னேன் என்ற அந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். அந்த பாடலின் முன்னோட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது. ஏப்ரல் 17 முதல் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் ஒளிபரப்பாகி வருகிறது.

100 இசையமைப்பாளர்கள் 100 பாடகர்கள் 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி - இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.

 Natpadu theral 2: Vairamuthu Amma Song lyrics teaser on his Twitte page

மேல்நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்கின்றது. தமிழில் கவிஞர் வைரமுத்து அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

பாடல்கள் எழுதி ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் இசையமைப்பாளர் ஒரு பாடகர் ஓர் இயக்குநர் என்று தேர்தெடுத்துப் பாடல் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறலைக் கவிஞர் வைரமுத்து தயாரித்து வழங்குகிறார்.

"எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்படவேண்டியிருக்கின்றன.

ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும்; ஆற்றவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால்தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை என்று கூறியுள்ளார் வைரமுத்து.

எஸ்பி பால சுப்ரமணியன் இந்த பாடலை பாடியுள்ளார்.

ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
அழகா அழகா பொய் சொன்னேன்....
.....
கத கதனு களி கிண்டி....
களிக்குள்ள குழி வெட்டி....
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே....

என்று அழகாய் போகிறது அம்மா பாடல். காரில் வரும் இளைஞர் தனது அம்மாவின் நினைவுகளோடு கண்ணீர் சிந்தியபடி வருவதாக அமைந்துள்ளது இந்த பாடல். அம்மாவைப் பற்றிய நினைவுகளோடு வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வசிப்பவர்களுக்கு இந்த பாடலைக் கேட்டால் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்கும்.

என்று அம்மாவின் மீதான பாசத்தை தனது வைர வரிகளில் வடித்துள்ளார் வைரமுத்து. ஆயிரம் கவிதைகள் எழுதியிருந்தாலும்அம்மாவிற்காக ஒரு கவிதை கூட எழுதவில்லையே என்று யோசித்த போது தோன்றிய கவிதைத்தான் அம்மாவுக்காக என்ற இந்த நாட்டுப்பாடல். அம்மாவிற்காக எழுதிய கவிதையை பாடலாக மாற்றி நாட்படு தேறலில் படமாக்கியுள்ளனர். என் தாயைப்பற்றிய பாட்டுப்பாடி என் தாய்க்கு பெருமை சேர்த்த சகோதரர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். உன் குரல் இன்னும் இன்னும் காற்றில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார் வைரமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+