சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு.. வெளியானது ரிசல்ட்.. எப்படி பார்ப்பது?

Google Oneindia Tamil News

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

சென்னை: நாடு முழுக்க எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Neet Exam Results: NTA NEET UG 2022 results to be announced today morning

நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

நாடு முழுக்க 7,78,725 கடந்த முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பக்கத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

சிபிஎஸ்இ முடிவுகள் வராமல் இருந்த காரணத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியே வந்ததால் தற்போது நீட் முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

neet.nta.nic.in. பக்கத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றுகளை டவுன்லோட் செய்ய முடியும். முன்னதாக மாணவர்கள் ரேங்கிங்கில் பயன்படுத்தப்பட்ட முறைகள் மாற்றப்பட்டு புதிய முறை இந்த தடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் ஒரே மார்க் எடுத்து இருந்தால், அதில் வயது அதிகம் உள்ள மாணவருக்கு முந்தைய ரேங்க் முன்பு கொடுக்கப்பட்டது.

இதை tie-breaking என்று அழைப்பார்கள். ஆனால் இந்த முறை இரண்டு மாணவர்கள் ஒரே மார்க் எடுத்தால் அதில் உயிரியல் பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே அதிக ரேங்க் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரே மார்க் இருந்தால், வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் உள்ள மாணவருக்கு அதிக ரேங்க் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Neet Exam Results: NTA NEET UG 2022 results to be announced today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X