'' பழ.கருப்பையா வந்தபோதும் இதை சொல்லி இருக்கலாமே மேடம்''.. ஸ்ரீபிரியாவை வறுக்கும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் இந்த வார ஹாட் டாபிக் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்தான். கமல் கனவுடன் ஆரம்பித்த இந்த கட்சியின் கூடாரமே கலைந்து சென்று கொண்டிருக்கிறது.

கமலின் வலது கரமாகவும், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராகவும் இருந்து அதிலிருந்து விலகிய மகேந்திரன் பத்மபிரியா உள்ளிட்ட ஒரு பெரும் படையுடன் திமுகவில் இணைந்தார்.

கிண்டல் செய்த ஸ்ரீபிரியா

கிண்டல் செய்த ஸ்ரீபிரியா

மகேந்திரனை வைத்து கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் தி.மு.க. ஒரு பக்கம் களமிறங்கி இருக்க, ம.நீ.ம.வில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்ததை கடுமையாக கிண்டலடித்தார் ஸ்ரீபிரியா. ''சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள் (எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்...மாற்ற வசதியாக இருக்கும்) என்று டுவிட்டரில் பொரிந்து தள்ளினார் அவர்.

இது எப்படி சரியாகும்?

இது எப்படி சரியாகும்?

ஸ்ரீபிரியாவின் இந்த கருத்தை ஒரு சிலர் ஆதரித்து இருந்தாலும், வேறு ஒரு தரப்பினர் அவரை கடுமையாக விமரிசித்து வருகிறார். ''அரசியல் வாழ்க்கையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது மிக மிக இயல்பான ஒன்று. ஒரே கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். தான் இருக்கும் கட்சி மீது அதிருப்தி கொண்டால், தனக்கு பிடித்தமான கட்சியில் சேருவது ஒன்றும் தப்பு இல்லை. இப்படி இருக்கும்போது ஸ்ரீபிரியாவின் இந்த கருத்து எப்படி சரியாகும்'' என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

 பழ.கருப்பையா நிலை என்ன?

பழ.கருப்பையா நிலை என்ன?

இது தவிர மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மூத்த தலைவர் பழ.கருப்பையா கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் சென்று வந்துள்ளார். கடைசியாக ம.நீ.ம.வில் தஞ்சம் அடைந்துள்ளார். ''சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள்'' என்று இப்போது கூறி இருக்கும் ஸ்ரீபிரியா, பழ.கருப்பையா ம.நீ.ம.வுக்கு வந்தபோதும் இதே கருத்தை சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று ஒரு தரப்பினர் குமுறுகின்றனர்.

இயல்புதான்

இயல்புதான்

கொள்கையை பற்றி பேசும் ஸ்ரீபிரியா, பழ.கருப்பையாவிடமும் இந்த கொள்கையை சொல்லி இருக்கலாமே என்று அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர். கட்சி மாறுவது என்பது இப்போது இயல்பாக மாறி விட்டது என மக்களும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவின் இந்த கருத்து மக்களிடம் சுத்தமாக ஈடுபட போவதில்லை. எனவே சென்றவர்களை விட்டுவிட்டு கட்சியில் இருப்பவர்களை தக்க வைக்கவும், கட்சியை இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீட்பது எப்படி? என்பது குறித்தும் ஸ்ரீபிரியா சிந்திக்க வேண்டும் என்பதே அரசியல்நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+