சாவதை தவிர வேறு வழியில்ல! கண்ணீர் விட்டு கதறிய மீரா மிதுன்! இருந்தும் விடாமல் கலாய்த்த நெட்டிசன்கள்!
சென்னை : தன் வளர்ச்சியை யாருக்கும் பிடிக்கவில்லை, ஏதோ ஆதங்கத்தில் பேசிய என் மீது வழக்குப் போட்டதால் சாப்பாட்டிற்கே வழி இல்லை என சூப்பர் மாடல் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன் கண்ணீர் விட்டு கதறியுள்ள நிலையில் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை மீரா மீதுன்
இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறாக பேசிய வழக்கு
இந்த புகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கண்ணீர் வீடியோ
இந்நிலையில் தன் வளர்ச்சியை யாருக்கும் பிடிக்கவில்லை, ஏதோ ஆதங்கத்தில் பேசிய என் மீது வழக்குப் போட்டதால் சாப்பாட்டிற்கே வழி இல்லை என சூப்பர் மாடல் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன் கண்ணீர் விட்டு கதறியும் ஒருவர் அழுவதைப் பார்த்தால் சந்தோசமாக இருப்பது உங்களை பார்த்து மட்டும்தான் என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.,' இதுகுறித்து மீரா வெளியிட்டுள்ள வீடியோவில்," என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து சிலர் பரிதாபப்பட்டாலும், ஒருவர் அழுவதைப் பார்த்தால் சந்தோசமாக இருப்பது உங்களை பார்த்து மட்டும்தான் என சில நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications