சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின் கம்பங்களை அகற்றாமல் புதிய சாலை! சொதப்பும் ஒப்பந்ததாரர்கள்! கும்பகோணம் அருகே புதிய சர்ச்சை!

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

Recommended Video

    அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்? வேலூரில் பைக்கை கூட நகர்த்தாமல் புதிய சாலை அமைப்பு! பரபரப்பு

    சாலையின் நடுவில் மின் கம்பங்களும் மின் கம்பிகளும் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம் என்ற அபாயமான நிலை உள்ளது.

    ஒப்பந்தப் பணிகள் செய்து முன் அனுபவம் இல்லாத நபர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகளின் சிபாரிகள் மூலம் வேலையை எடுத்து சொதப்பும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளன.

    ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்! ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!

     தொடரும் சர்ச்சைகள்

    தொடரும் சர்ச்சைகள்

    வேலூர் மாநகராட்சியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்துடன் கான்கிரீட், ஜீப் டயருடன் கான்கிரீட், அடி பம்பு குழாயை அடக்கம் செய்யும் வகையில் கான்கிரீட் என தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வந்தன. அதைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சியில் கழிவுநீரில் கான்கிரீட் கலவையை கொட்டிய அவலத்தையும் காண முடிந்தது. இப்போது என்னவென்றால் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது மின்கம்பங்களை அகற்றாமலேயே புதிய சாலை போடப்பட்டிருக்கிறது.

    சாலை விரிவாக்கம்

    சாலை விரிவாக்கம்

    இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் போது விபத்து ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சாலை விரிவாக்கப் பணியை செய்த ஒப்பந்ததாரர், மின் வாரிய அலுவலகத்தில் முறையாக எழுதிக் கொடுத்திருந்தாலே அந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டிருக்கும். ஆனால் அதைக் கூட செய்யாமல் மிகவும் கவனக் குறைவாக ஒப்பந்ததாரர் பணி செய்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஒப்பந்தப் பணிகள் செய்து முன் அனுபவம் இல்லாத நபர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகளின் சிபாரிசுகள் மூலம் வேலையை எடுத்து சொதப்பும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளன.

    ஒப்பந்ததாரர்கள்

    ஒப்பந்ததாரர்கள்

    ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்யும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் இதனை எப்படி அனுமதித்தார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கிய போதே அந்த மின் கம்பங்களை சாலையின் ஓரம் மாற்ற வேண்டும் என ஏன் யாருக்கும் தோன்றவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக அரசுக்கு தான் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

     அகற்றக் கோரிக்கை

    அகற்றக் கோரிக்கை

    இதனிடையே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என தென்னூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதன் பிறகாவது இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    New road near Kumbakonam without removing electric poles: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X