சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புது பிரிவு.. தமிழக போலீஸ் அதிரடி

குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவினை தமிழக போலீஸ் உருவாக்கி இருக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கி இருக்கிறது.

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை உலுக்க எடுத்து வருகிறது. இதனால் ஆங்காங்கே இளம்பெண்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தவும் பலமான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

New section for womens protection

மேலும் பெண்கள், மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சில அதிரடிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக போலீசார் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த புதிய பிரிவின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும் என கூறப்படுகிறது.

இந்த அமைப்பு சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu Police created a new section to prevent crimes against women and children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X