தந்தை மறைவால் NIA விசாரணைக்கு போகாத நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி- பிப்.8-ல் ஆஜராக உத்தரவு!
சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி பிப்ரவரி 8-ந் தேதி ஆஜராக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA,என் ஐஏ) உத்தரவிட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்துடன் தமிழருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலிகள் இயக்க கொடி ஆகியவற்றை நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் சீமான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதுவரை மத்திய அரசு நாம் தமிழர் கட்சி, சீமான் தரப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திடீரென தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக நேற்று இடும்பாவனம் கார்த்தி ஆஜராக இருந்தார். ஆனால் அவரது தந்தை நேற்று மறைந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து வரும் 8-ந் தேதி விசாரணைக்கு இடும்பாவனம் கார்த்தி ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் விசாரணைக்கு இடும்பாவனம் ஆஜராவாரா? அல்லது அவகாசம் கேட்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications