தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல.. விரும்பினால் செலுத்திக் கொள்ளலாம்.. தமிழக அரசு
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வது இனி கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதலே கொரோனா எனும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என பரவி வருவதால் நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் தளர்வுகளும அறிவிக்கப்பட்டு வந்தன.

மூன்றாவது அலை
தமிழகத்தை பொருத்தமட்டில் மூன்றாவது அலை காரணமாக கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து தற்போது குறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசுகள்
இது தொடர்பாக முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலதான் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொணடு வருவதாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. மாஸ்க், சானிடைசர் போன்ற விஷயங்களை மக்கள் விரும்பினால் பின்பற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள திரும்ப பெறப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பொது சுகாதாரத் துறை சட்டத்தின்படி இந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முகக் கவசம் அணிவதும் தனி மனித இடைவெளி பின்பற்றுவதும் பொதுமக்களின் விருப்பம்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்
தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி தாமாக முன் வந்து அதை செலுத்திக் கொள்ளலாம். அதாவது இனி கொரோனா தடுப்பூசி என்பது கட்டாயமல்ல. பொது மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் 2ஆம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்லனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications