"தமிழகத்தில் முழு ஊரடங்கு வேண்டாம்.." ஏன் தெரியுமா? WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உறுதி
சென்னை: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஏற்கனவே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
இந்தியாவிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஒடிசா என பல்வேறு மாநிலங்களில் 2,500-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது. இது தவிர ஓமிக்ரான் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் சென்று வருகிறது.

தமிழகத்தில் 3-வது அலை
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 1 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.
இதேபோல் தமிழகத்திலும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

முழு ஊரடங்கு தேவை இல்லை
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். சென்னையில் திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

வைரஸ் கடைசிவரை பயணிக்கும்
நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், ' கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் முழு ஊரடங்கு தேவையில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. . கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன்தான் தொடர்ந்து பயணிக்கும். அதே வேளையில் கொரோனா கட்டுப்பாடுகளை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

ஒமிக்ரான் 4 மடங்கு வேகம்
தற்போது கொரோன கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் லாக்டவுன் போட வேண்டிய அவசியமில்லை. ஒமிக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது. பாதிப்பு குறைவாக தெரிந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சௌமியா சுவாமிநாதன் கூறினார்.
Recommended Video

இதுவும் கடந்து போகும்
தொடர்ந்து பேசிய அவர், 'இனிமேல் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம். எச்சரிக்கையுடன் இருந்தால் கொரோனா வைரஸை கடந்து விடலாம்' என்று கூறினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications