யாரையும் இழிவுபடுத்தக்கூடாது.. மீறினால் சட்டப்படி நடவடிக்கை...எச்சரித்த புஸ்சி ஆனந்த்
விஜய் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னை: யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை , இணைய தளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என்று விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார். மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புஸ்சி ஆனந்த் எச்சரித்துள்ளார்.
Recommended Video

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தைத்தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்க்கிறார் விஜய். 'தளபதி 66' என அடைமொழியிடப்பட்ட அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரது பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விஜய் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை எவ்வளவு தான் வேண்டாம் என சொல்லி வந்தாலும், அவர் தான் விஜய்யின் தளபதி 66 படத்துக்கு ஹீரோயின் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பெரும்பாலான விஜய் ரசிகர்களும் வேறு வழியின்றி ஏற்று வருகின்றனர்.

தளபதி 66 பட பூஜை
எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மீம்ஸ் மரண பங்கம்
சிலர், ராஷ்மிகா தயவுசெய்து வேணாம். அப்படியே போட்டாலும் படம் தொடங்கி இருபது நிமிஷத்தில் அவர் கதையை முடித்துவிடுங்கள் என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் செய்து ரசிகர்கள் பதிவிட்டனர். இது பலரது மனதை காயப்படுத்தியிருக்கும் என்றாலும் பட பூஜையில் உற்சாகமாகவே பங்கேற்றார் ராஷ்மிகா.

புஸ்சி ஆனந்த் அறிக்கை
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அரசுப்பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை , இணைய தளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை
இது நம்முடைய தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்தை விட்டும் நீக்கியுள்ளோம்.

சட்டப்படி நடவடிக்கை பாயும்
இருப்பினும் நம் தளபதி அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications