தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 21% அதிகம் பெய்துள்ளது... சென்னையில் 32% குறைவு
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்தில் 21 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 21 % அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தினசரியும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி. நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னயில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியலரசன், தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழைபெய்யக்கூடும் என்றும் கூறினார். நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமி வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய புவியரசன், வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 21 % அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் 17செ.மீ பதிவாக வேண்டும், ஆனால் தற்போது 20 செ.மீ பதிவாகி உள்ளது. அதே போல் சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. 25 செ.மீ பெய்ய வேண்டிய இடத்தில், இதுவரை 17செ.மீ மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அக்டோபரில் தொடங்கியுள்ள மழை டிசம்பர் வரை பெய்யும் கடந்த ஆண்டைப்போல நடப்பாண்டும் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில்தான் வழக்கமாக அதிக அளவில் மழை பெய்யும். கடந்த 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications