2022ல் பெரிய "நெருப்பு விண்கல்" வரப்போகிறது.. எழுதி வைத்துவிட்டு போன நாஸ்டர்டாமஸ்.. பெரும் கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ல் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்று தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.

கணிப்பு

கணிப்பு

ஆனால் சமயங்களில் இவர் கணிப்புகளை புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சமயங்களில் குழப்பம் விளைவிப்பவையாக இருக்கும். இருப்பினும் இவரின் பல நூறு கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.

நாஸ்டர்டாமஸ்

நாஸ்டர்டாமஸ்

இந்திய அரசியல் முடிவுகள் குறித்தும் இவர் நிறைய கணிப்புகளை மேற்கொண்டதாக அவ்வப்போது கூறப்படுவது வழக்கம். 9/11 தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், லண்டன் தீ விபத்து என்று பல நூறு விஷயங்களை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார்.

 நாஸ்டர்டாமஸ் 2022

நாஸ்டர்டாமஸ் 2022

இந்த நிலையில்தான் 2022ல் நடக்க போகும் விஷயங்கள் என்று இவர் கணித்ததாக இவரின் கவிதைகளில் இருந்து முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்கும். தீ பிளம்பு போன்ற.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கல் பூமியை தாக்கும். இதனால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விண்கல்

விண்கல்

அதேபோல் 2002ல் ஏற்பட்டது போல மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்படும். இதனால் பஞ்சம் ஏற்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு அதலபாதாளத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய புயல், வெள்ளம் ஏற்படும். இதனால் எதிர்பாராத அழிவு ஏற்படும்.

2022 கணிப்பு

2022 கணிப்பு

இதன் காரணமாக உலகில் இன்னும் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை கட்டுபடுத்த தொடங்கும். மனிதர்கள் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்று அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+