சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே பஸ்ஸில் இத்தனை பேரா?.. நிரம்பி வழியும் பேருந்துகள்.. சென்னையில் இதுதான் நிலை.. என்ன நடக்குமோ?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அமலாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில் தற்போது சில பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையே நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுக்க அன்லாக் 4.0 செயல்பாடுகள் அமலுக்கு வந்து இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி லாக்டவுன் கட்டுப்பாட்டு தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

2 இந்தியர்களுக்கு...பயங்கரவாதிகள் முத்திரை...ஐநாவில் மூக்குடைபட்ட பாகிஸ்தான்!!.2 இந்தியர்களுக்கு...பயங்கரவாதிகள் முத்திரை...ஐநாவில் மூக்குடைபட்ட பாகிஸ்தான்!!.

போக்குவரத்து தொடங்கியது

போக்குவரத்து தொடங்கியது

செப்டம்பர் 1ம் தேதி குறைந்த அளவிலான பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் மக்கள் எண்ணிக்கை குறைவான அளவிலேயே பேருந்துகளில் இருந்தது. அச்சம் காரணமாகவும், குறைவான பேருந்து எண்ணிக்கை காரணமாகவும் மக்கள் பெரிய அளவில் பேருந்துகளில் பயணிக்கவில்லை. 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் கூட பேருந்துகளில் செல்லவில்லை.

ஆனால் மாற்றம்

ஆனால் மாற்றம்

ஆனால் நேற்றில் இருந்து பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கி உள்ளது. முதல் நாள் 10 பேர் கூட பேருந்தில் செல்லவில்லை. ஆனால் நேற்று சென்னையில் பல பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் நேற்று கொஞ்சம் கூட சமூக இடைவெளி விடாமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணித்தனர். முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் செல்லும் புகைப்படங்கள் வெளியானது.

என்ன விதி

என்ன விதி

பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி 55 இருக்கைகள் கொண்ட புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளும், 40 இருக்கைகள் கொண்ட நகர பேருந்துகளில் 24 பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

விதி மீறல்

விதி மீறல்

ஆனால் இந்த விதிகளை மீறி பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நேற்று சென்னையில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் சென்றனர். இருக்கைகள் அனைத்தும் மொத்தமாக நிரம்பியது. அதேபோல் மக்கள் நின்று கொண்டும் பயணம் செய்தனர்.

சென்னை மட்டுமல்ல

சென்னை மட்டுமல்ல

சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் இதேபோல் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்ல தொடங்கினார்கள். திருச்சியில் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்தனர். தஞ்சையிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால் மக்கள் படியில் தொங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.

தனியார் இல்லை

தனியார் இல்லை

தற்போது தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைவான அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 50க்கும் அதிகமான பயணிகள் ஒரே பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இன்றும் சென்னையில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்தில் செல்ல தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    அது என்ன Herd Immunity? கொரோனாவை கட்டுபடுத்த இது பயன்படுமா?
    பெரிய அச்சம்

    பெரிய அச்சம்

    அதோடு தற்போது தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் இன்னும் பேருந்துகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னனை உள்ளிட்ட ஜனநெருக்கடி அதிகம் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    Not 50% but too many passengers: Some Tamilnadu buses are running full in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X