சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 551 பேருக்கு தொற்று.. 758 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்று 551 பேருக்கு கொரோனா உறுதி!

    அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 323-ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Novel Corona virus affected Patients details in Tamilnadu

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 758 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 326-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12,272 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறுநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் உள்ளது.

    தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 52 லட்சத்து 79 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் இன்று மட்டும் ஐம்பாதிரத்து 501 நபர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Novel Corona virus affected Patients details in Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X