இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பெரிய அளவில் குறைந்தது சமையல் எண்ணெய் விலை!
சென்னை : கடந்த மாதம் வரை கடுமையாக உயர்ந்து வந்த சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் நோக்குடன் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதன் காரணமாக பாமாயில் விலை ஒரு லிட்டர் 120 ரூபாய் என்கிற அளவிற்கு சரிந்தள்ளது. இதேபோல் மற்ற சமையல் எண்ணெய் விலைகளும் சரிந்துள்ளது,
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து வருவாயை இழந்து தவித்து வருகிறார்கள் மக்கள்.
ஆனால் இப்படியான சூழலில் கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வந்தது மக்களிடையே கவலையை அதிகரித்தது. பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் உடன் சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்தது மக்களை துயரத்தில் ஆழத்தியது.

சமையல் எண்ணெய்
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்த எண்ணெய் விலை மற்றும் 2021 ஜூனில் பெரிய அளவில் உயர்ந்து இருந்தது. கடலை எண்ணெய் விலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 179 ரூபாய்க்கு (ஒரு லிட்டர்) விற்பனையானது. ஆனால் இப்போது அதன் விலை 9 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 196 ரூபாய் ஆக மாறியது. கடுகு எண்ணெய் விலை கடந்த ஆண்டு 132 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 177 ரூபாய் ஆக அதிகரித்தது அதாவது 34 சதவீதம் அளவிற்கு கடுகு எண்ணெய் விலை உயர்ந்தது.

சூரியகாந்தி எண்ணெய்
வனஸ்பதி எண்ணெய் விலையும் 106ரூபாயில் இருந்து 141 ரூபாயாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய் 117 ரூபாயில் இருந்து 169 ரூபாய் ஆக உயர்ந்தது சூரியகாந்தி எண்ணெய் விலை 128 ரூபாயில் இருந்து 195 ரூபாய் ஆக உயர்ந்தது,.. பாமாயில் விலை 95 ரூபாயில் இருந்து 130 ரூபாய் ஆகவும் கடந்த மாதம் நிலவரப்படி உயர்ந்து இருந்தது.

இறக்குமதி வரி
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றுக்கு மத்திய அரசு அளவுக்கு அதிகமாக இறக்குமதி வரி விதிப்பதால் உள்நாட்டில் இவற்றின் விலைகள் உயர்ந்து வந்தன இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கான வரியை மத்திய அரசு கடந்த மாதம் கணிசமாக குறைந்தது.

சோயா பீன் எண்ணெய்
பாமாயில் மீதான இறக்குமதி வரியை டன்னுக்கு ரூ.8288 வரை குறைக்கப்பட்டது. இதேபோல் சோயா பீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரை ஒரு டன்னுக்கு ரூ.2758 வரை குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு கடந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் உள்நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது,

மக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் ஜுலை மாதமான தற்போது சமையல் எண்ணெய் விலை அனைத்தும் கணிசமாக குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் சூர்யகாந்தி எண்ணெய் விலை 195 ரூபாயில் இருந்து 170 ரூபாய் ஆக குறைந்துள்ளது. பாமாயில் எண்ணெய் விலை ரூ.155ல் இருந்து 120 ரூபாய் ஆக குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலை 245 ரூபாயில் இருந்து 215 ரூபாய் ஆக குறைந்துள்ளது. கடலை எண்ணெய் விலை 220 ரூபாயில் இருந்து 210 ரூபாய் ஆக குறைந்துள்ளது, நல்லெண்ணெய் விலை 290 ரூபாயிலிருந்து 270 ரூபாய் ஆக குறைந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை குறைந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications