Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முற்றுப்புள்ளி வைக்க ரெடியான எடப்பாடி.. பளிச் மூவ்! “ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல” சிரித்த ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஏதோ முடிவோட தான் வந்திருக்கீங்க போல" என சிரித்தபடி தெரிவித்தார் ஓபிஎஸ்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று சந்தித்து கடிதம் அளித்தனர்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. 2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் தொடங்கிய பின் இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

எதிர்க்கட்சி துணைத் தலைவர்

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என்று இரண்டாக பிரிந்தது. பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தான் என்று சொல்லி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்தார் ஈபிஎஸ். ஆனால் இந்த நியமனத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை. தான் தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்றும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தான்தான் என்றும் சொல்லி வருகிறார் பன்னீர்செல்வம்.

இருக்கை ஒதுக்கீடு

இருக்கை ஒதுக்கீடு

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிசாமி தரப்பில் விடுக்கப்பட்டது. பலமுறை சபாநாயகர் அப்பாவுக்கு இது தொடர்பாக மனு அளித்தனர். ஆனால் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வத்தையே அங்கீகரித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும்தான் அருகருகே அமர்ந்திருந்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற பதவியே இல்லை எனவும், அது அவர்களது கட்சியால் உருவாக்கப்பட்டது என்பதால் அதில், தான் எப்படி முடிவு எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் கூறியிருந்தார். மேலும், சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது பற்றி தனக்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

ஈபிஎஸ் அணி முடிவு

ஈபிஎஸ் அணி முடிவு

இந்நிலையில், இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதிலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அருகருகே இருக்கைகள் இடம்பெற்றிருந்தன. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க சபாநாயகரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சபாநாயகரை சந்தித்த எடப்பாடி

சபாநாயகரை சந்தித்த எடப்பாடி

சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஓபிஎஸ் பேட்டி

ஓபிஎஸ் பேட்டி

இந்தநிலையில், இன்று இரங்கல் தீர்மானத்திற்குப் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்பும்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசிய நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முடிவோட தான் வந்திருக்கீங்க

முடிவோட தான் வந்திருக்கீங்க

மேலும், தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கூட்டங்களில் பங்கேற்பீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், முறைப்படி அதிமுக சார்பாக யார் கலந்துகொள்வது அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், "ஏதோ முடிவோட வந்திருக்கீங்க போல" என சிரித்தபடி தெரிவித்தார் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+