ரத்தகளறியான ராயப்பேட்டை..ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீச்சு
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதால் ராயப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும் கம்புகளை வீசியும் தாக்கியதால் பதற்றம் உருவானது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளதாகல் ராயப்பேட்டை ரத்தக்களறியாக மாறியுள்ளது.
Recommended Video
எடப்பாடி பழனிச்சாமி வானகரம் சென்றுள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி வந்த ஓ. பன்னீர் செல்வம் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டது. காவல்துறையினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். ராயப்பேட்டையே ரத்தகளறியாக காணப்படுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உள்ளே விட மறுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தகராறு செய்வதால் பதற்றம் உருவாகியுள்ளது வன்முறை களமாக மாறியுள்ளது அவ்வை சண்முகம் சாலை. பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை உதைத்து திறந்து உள்ளே நுழைந்துள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.

போர்க்களமான ராயப்பேட்டை
அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அலுவலகம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவதற்காக வீசிய கற்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கிழித்து வீசினர்.

ரத்தக்களறி
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளர்களுக்கும் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் நிகழ்ந்த வன்முறையால் ரத்தக்களறியாகியுள்ளது ராயப்பேட்டை. தலைமைக் கழகத்தை கைப்பற்றியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். கையில் அதிமுக கொடியுடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார் ஒ.பன்னீர் செல்வம்.

பொன்விழா காணும் அதிமுக
அதிமுக தலைமை அலுவலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்களை கிழித்து தீ வைத்து எறித்து வருகின்றனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள். அதிமுக பொன்விழா காணப்போகும் இந்த காலகட்டத்தில் மிகப்பெறும் வன்முறை நடைபெறுவது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications