சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதி மீது ஓபிஎஸ் பரபர புகார்.. இன்றும் வறுத்தெடுத்த கிருஷ்ணன் "உடனே மாத்துங்க”- மீண்டும் முறையீடு

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பு மீண்டும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளது. தனது செயல் கீழ்த்தரமானது என நீதிபதி விமர்சித்திருப்பதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவேண்டும் என ஓபிஎஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மனு அளித்த ஓ.பி.எஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதியை மாற்றக் கோரும் நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தி தெரிவித்திருந்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. இந்நிலையில், மீண்டும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ளது.

இந்த வேலை வேண்டாம்.. நாகரீகம் முக்கியம்.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு! இந்த வேலை வேண்டாம்.. நாகரீகம் முக்கியம்.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு!

மீண்டும் ஐகோர்ட்டே விசாரிக்கும்

மீண்டும் ஐகோர்ட்டே விசாரிக்கும்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

ஓபிஎஸ் தரப்பு மனு

ஓபிஎஸ் தரப்பு மனு

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்க கோரிக்கை

திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்க கோரிக்கை

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிபதி கடும் கண்டனம்

நீதிபதி கடும் கண்டனம்

அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

கீழ்த்தரமான செயல்

கீழ்த்தரமான செயல்

இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்லல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஓபிஎஸ் குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்

அதன்பின்னர், நீதிபதியை மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக அளித்த கோரிக்கை குறித்த நடைமுறை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். உங்கள் மனுதரரரை தவறாக வழிநடத்தாதீர்கள் என்றும், நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் ஓ.பி.எஸ் தரப்புக்கு அறிவுரை கூறினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

அப்போது ஈ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர், அறியாமையால் ஒருசில வழக்கறிஞர்கள் செயல்படலாம் என்றும், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கும் ஓ.பி.எஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

 மீண்டும் ஓபிஎஸ் புகார்

மீண்டும் ஓபிஎஸ் புகார்

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு மீண்டும் முறையிட்டுள்ளது. இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓபிஎஸ் தரப்பின் நடவடிக்கையை கீழ்த்தரமான செயல் என விமர்சித்து தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.பிரசாத் புகார் அளித்துள்ளார்.

English summary
O.Panneerselvam has again appealed to Chief Justice of Chennai High Court seeking transfer ADMK General Committee case to another session, after the judge has criticized OPS actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X