2 மாஜிக்களுக்கு முக்கிய பதவி.. அதிரடியில் ஓபிஎஸ்! ஒருபக்கம் சுப்ரீம் கோர்ட்.. ஷாக்கான எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது, முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவரை அமைப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ச்சியாக திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் தனது அணியில் தொடர்ந்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி அதிரடியாக ஒரே நாளில் 1910 நிர்வாகிகளை நியமித்தார்.

இந்நிலையில், தற்போது இரண்டு மாஜி எம்.எல்.ஏக்களை அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக நியமித்துள்ள ஓபிஎஸ், அணிகளின் மாநில நிர்வாகிகளையும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தீவிரம் காட்டும் ஓபிஎஸ்

தீவிரம் காட்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஓபிஎஸ் தன்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்றும், தானே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே அதிமுகவில் ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், தனது அணியை பலப்படுத்த மாநில, மாவட்ட, ஒன்றியம் என அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதிருப்தியாளர்களை இழுத்து

அதிருப்தியாளர்களை இழுத்து

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த அதிமுகவினரை தனது அணிக்குக் கொண்டு வந்து பொறுப்புகளை வழங்கி வருகிறார் ஓபிஎஸ். இதனால் முன்னாள் எம்.எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். ஒவ்வொரு மாவட்டத்தையும் நிர்வாக வசதிக்காக பலவாறாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமித்ததோடு, பொதுக்குழு உறுப்பினர்களையும் புதிதாக நியமித்தார். மேலும், ஒன்றிய, கிளை அளவிலும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். இதன் மூலம், தனது அணியை பலமாக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஓபிஎஸ்.

1910 நிர்வாகிகள்

1910 நிர்வாகிகள்

சமீபத்தில், அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் கூட்டினார் ஓபிஎஸ். இதில் 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக கட்சியின் சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. அதன்படி சமீபத்தில் திருச்சி, வேலூர் ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, கிருஷ்ணகிரி என்று 6 மாவட்டங்களுக்கு 1910 நிர்வாகிகளை ஒரே நாளில் நியமனம் செய்தார் ஓபிஎஸ்.

இரண்டு மாஜிக்கள்

இரண்டு மாஜிக்கள்

இந்நிலையில், புதிதாக இரண்டு அமைப்பு செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் கழக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், வெளியிட்டு அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்புச் செயலாளராக K.E.கிருஷ்ணமூர்த்தி, Ex. MLA கொம்மம்பட்டு கிராமம், கோவிந்தாபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
கழக அமைப்புச் செயலாளரராக P.S. கந்தசாமி, Ex. MLA, அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சார்பு அணிகளின் நிர்வாகிகள்

சார்பு அணிகளின் நிர்வாகிகள்

இந்நிலையில், புதிதாக இரண்டு அமைப்பு செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் கழக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், வெளியிட்ட அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்புச் செயலாளராக K.E.கிருஷ்ணமூர்த்தி, Ex. MLA கொம்மம்பட்டு கிராமம், கோவிந்தாபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
கழக அமைப்புச் செயலாளரராக P.S. கந்தசாமி, Ex. MLA, அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+