பொதுச் செயலாளரா? ஜெயலலிதாவுக்கு மட்டும் தான்! இதை மாற்ற ‘அவங்க’ யார்? கொந்தளித்த ஓபிஎஸ்! இது தானா?
சென்னை : அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் எனவும், இதனை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என சென்னையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த சிலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வரும் நிலையில், தற்போது அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமையில் சுமார் 200 பேர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மலைவாழ் மக்களுக்கான சட்டசபை தொகுதியில், ஒரு முறை திமுகவிலும், மற்றொரு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரசேகரன். தற்போது பல கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்களுடன் ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
அவர்கள் இணைப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ்,"அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய வாய்ப்பை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதனை தற்போது உள்ளவர்கள் மாற்றிவிட்டார்கள்.

உரிமையை பறிக்கும் செயல்
இது அதிமுக தொண்டர்களின் உரிமையை பறிக்கும் செயலாக நடைபெற்றிருக்கிறது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். இதனை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எடப்பாடி தரப்பு நடத்திய பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டனர். இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ரத்தம் சிந்தி..
ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினை ஏற்படுத்தினார். இருபெரும் தலைவர்களும் செய்த தியாகங்கள், ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம், சட்ட விதி, அடிபிறழாமல் கட்டிக்காத்த மாண்பு பலநூறு ஆண்டுகளானாலும் சட்ட விதியை எந்தவித மாசுவும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம்.

தர்மயுத்தம்
தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற தர்மயுத்தத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவார்கள்" எனப் பேசினார். ஏற்கனவே ஜெயலலிதா வகித்த பதவி என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் என இனிமேல் அதிமுக யாருக்கும் பதவி இல்லை என எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்ததற்கு பிறகு நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications