ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. தகவல் கேட்டதும் தேனிக்கு விரைந்த ஓபிஎஸ்! பரபரப்பு
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து தேனிக்கு விரைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, தனது அணியில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வரும் ஓபிஎஸ் வாரம் ஒருமுறையாவது தனது சொந்த ஊருக்குச் சென்று ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தனது தாயார் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, காரில் தேனிக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தாயார்
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். 90 வயதைக் கடந்த இவர் தற்போது தேனி பெரியகுளத்தில் வசித்து வருகிறார். அவருக்கு இன்று பிற்பகலில் திடீரென கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதி
பல ஆண்டுகளாக தொடர்ந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள் கடந்த வாரம் மதுரையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று பிற்பகலில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட ஓபிஎஸ் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று பழனியம்மாள் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாயாரின் உடல் நலக்குறைவு குறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவல் சொல்லப்பட்டது.

தேனி விரையும் ஓபிஎஸ்
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து அவசரமாக சாலை மார்க்கமாக தேனிக்கு சென்று கொண்டிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தேனியில் மருத்துவமனைக்கு வந்து அவரது தாயாரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு அதிமுக ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் வந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications