ஒன்னும் பண்ண முடியாது! எம்ஜிஆர் பிறந்தநாளில் ஓபிஎஸ் மகன் கொடுத்த ஷாக் தகவல்! எம்ஜிஆரே சொல்லிட்டாரே!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற இறுதி விசாரணையில் இருக்கும் நிலையில் கட்சி விதிகளை அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப் எம்ஜிஆர் வகுத்த விதிகளை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதோடு அவர் விடுத்த அறிவிப்புகளும் செல்லத்தக்கதாகி விட்டது.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. அவருக்காக அவரது மகன் ரவீந்திரநாத் டெல்லி மேலிடத்தை தொடர்பு கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜெயபிரதீப்
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத் குமார் எம்பியாகவும் கட்சியிலும் சில பதவிகளை வகித்ததால் சற்று பிரபலமான முகமாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகனான ஜெயப்பிரதீப் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது கட்சி விவகாரங்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடுவது வழக்கம்.

அதிமுக வழக்கு
தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆணித்தரமாக எடுத்து வைத்துள்ளது. கட்சி விதிகளின்படி தொண்டர்களே பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த நிலையில் எம்ஜிஆர் வகுத்த சட்ட விதிகளின்படி தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என ஜெயப்பிரதீப் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சட்ட விதிகள்
மேலும் அதில் எம்ஜிஆர் சட்ட விதி மற்றும் விதிமுறைகளையும் குறிப்பிட்டு இருக்கிறார் அதன்படி சட்ட விதி பிரிவு ஒன்றின்படி கலகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச் செயலாளர் ஆவார். பிரிவு இரண்டின் படி பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கழகக் கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும் புதுச்சேரி ஆந்திரம் கர்நாடக கேரளம் மகாராஷ்டிரா புது டெல்லி அந்தமான் போன்ற மாநிலக் கழகங்களின் அடங்கிய கிளை கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பின்னணி என்ன?
விதி 43 : திருத்தத்தின்படி கழக சட்ட விதிகளை ஏற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும் ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளரை கழகப் பொது உறுப்பினர்கள் (கழகத் தொண்டர்கள்) தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கு திருத்துவதற்கோ உரியதல்ல என குறிப்பிட்டுள்ளார். அதாவது எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மாற்ற முயற்சிப்பதாகவும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே ஜெயப்பிரதீப் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications