இந்த ஸ்பீடில் போனா மார்க்கெட்டுக்கு வருமா? ஓலா இ பைக் தயாரிப்பில் சிக்கல்.. என்னதான் நடக்கிறது?
சென்னை: இந்திய வாகன மார்க்கெட்டில் தற்போது இ பைக்குகள் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இ
பைக்குகளை வாங்குவதற்கு இளைஞர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. அதிலும் ஓலா நிறுவனம் கொண்டு வரும் இ பைக் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்துள்ளது. இங்கு தற்போது ஓலா இ ஸ்கூட்டர் உற்பத்தி பணிகள் தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 2400 கோடி செலவில் உலகிலேயே மிகப்பெரிய இ ஸ்கூட்டர் மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வேலை பார்க்கும் வகையில் இந்த ஓலா உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 15ம் தேதி இதன் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்ட போதே ஒரே நாளில் 1 லட்சம் பேர் இங்கு பைக்குகளை புக் செய்தனர்.

ரெக்கார்ட்
499 ரூபாய் முன்பணம் செலுத்தி புக் செய்யலாம் என்று ஓலா நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து ப்ரீ புக்கிங் முதல் நாளே ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டது. ஒரு நாளுக்கு 25 ஆயிரம் பைக்குகளை உருவாக்குவோம் என்ற திட்டத்தோடு இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. குறிப்பிட்ட சில கஸ்டமர்களுக்கு முதல் கட்டமாக இந்த பைக்குகள் டெலிவரியும் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் என்ன?
2022 மே மாதத்தின் போது உலகின் 15 சதவிகிதம் மின்னணு பைக் உற்பத்தியை செய்திருக்க வேண்டும் என்பதுதான் ஓலா நிறுவனத்தின் இலக்கு. ஆனால் இந்த நிறுவனத்தின் உற்பத்தி எதிர்பார்த்த அளவிற்கு வேகமாக இல்லை. ஏற்கனவே பணிகள் பல வாரங்கள் பின்தங்கி இருக்கின்றன என்று அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு நாளுக்கு 25000 பைக்குகளை உற்பத்தி செய்ய விரும்பிய அந்த நிறுவனம் இப்போது 150 பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்கிறதாம்.

உற்பத்தி குறைவு
ஆம் இதே வேகத்தில் போனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் 90 ஆர்டர்களை உற்பத்தி செய்து டெலிவரி செய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இந்த நிறுவன தொழிற்சாலையின் பாடி கட்டும் யூனிட் பாதி அளவுடன் செயல்பட்டு வருகிறது. பெயிண்ட் அடிக்கும் யூனிட் செயல்படவே இல்லை என்று நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். பல்வேறு முக்கியமான பாகங்கள் வராத காரணத்தால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விளக்கம்
இது தொடர்பாக ஓலா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் வருண் துபே அளித்த பேட்டியில், எங்கள் உற்பத்தியில் பெரிய அளவில் தாமதம் ஏற்படவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை. சிறிய அளவிலான தாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சில வார அளவிலான தாமதம் ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு
சில உற்பத்தி பொருட்கள் கிடைக்கவில்லை. செமி கண்டக்டர் போன்ற பாகங்கள் கிடைக்கவில்லை. உலக அளவில் இதற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இது எல்லா இ பைக் உற்பத்தி நிறுவனங்களிலும் நடக்கிறது. மற்றபடி எங்களின் உற்பத்தியை நாங்கள் மேலும் துரிதப்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications