ஓமிக்ரான் அறிகுறிகள்: காய்ச்சல் வராது... தலைவலி உடல்சோர்வுதான் ஏற்படுமாம் - நிபுணர்கள் கருத்து
ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல் வராது என்றாலும் கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஓமிக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும் தலைவலி ஏற்படும் என்று அதன் அறிகுறிகள் பற்றி தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி, இதுவரை 30 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று வரை கலிபோர்னியா, கொலராடோ, மினிசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நியூயார்க்கிற்கும் ஒமிக்ரான் பரவியிருக்கிறது. நியூயார்க்கில் 5 பேருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் உருமாறிய ஓமிக்ரான் கிருமி தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது ஓமிக்ரான் வைரஸ், இதனிடையே இந்த நோய் பற்றியும் அறிகுறிகள் பற்றியும் விளக்கம் அளித்துள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி,நவம்பர் 18 ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உடனடியாக உயரத் தொடங்கவில்லை, ஆனால் இந்த வாரம் அவை உயரத் தொடங்கின மற்றும் அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. எனவே இது வேகமாகப் பரவும் வைரஸ் என்பதை நாங்கள் அறிவோம்.
இவை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வரை குறைவாகத்தான் உள்ளது.
தற்போதைக்கு, தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம். இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
ஓமிக்ரான் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலி மற்றும் தலைவலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். வாசனையின்மை,சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. ஒமிக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications