ஓபிஎஸ் என்னோட சித்தப்பா! போட்டோஷாப்பில் விழுந்த ‘சிவா’! ஒரு கோடியை ஏப்பம் விட்ட ’சர்க்கரை’! ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சித்தப்பா எனக்கூறி போலியாக புகைப்படங்களை தயாரித்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை கைது செய்யும் பணியில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

    Edappadi Palaniswami இதுவரை கட்சிக்காக எதையும் செய்ததில்லை - Kovai Selvaraj*Politics

    அரசு உள்ளூர் வார்டு கவுன்சிலர் முதல்வர் வரை தனக்கு அனைவரையும் தெரியும் என பந்தா காட்டி பலரின் பணத்தை ஆட்டைய போட்டு சுகபோக வாழ்வு வாழும் மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பெரும்பாலான சாமானிய மக்கள் எப்படியாவது அரசு வேலை வாங்கி விட்டால் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என எண்ணி பணம் கொடுத்தாவது அதனை பெற்று விட வேண்டும் என துடிப்பது வழக்கம்தான்

    மோசடி கும்பல்

    மோசடி கும்பல்

    அப்படிப்பட்ட நபர்களை குறி வைத்து பணத்தை மோசடி செய்யும் கும்பல்களின் அட்டூழியங்கள் ஆண்டு கணக்கில் தொடர்ந்து வந்தாலும் பொதுமக்களும் நம்பி ஏமாறத்தான் செய்கிறார்கள். தற்போதைய நிலையில் அரசு வேலை என்பது தேர்வு மூலம் எழுதி நேரடி நியமனம் மூலம் தான் கிடைக்கும். மோசடி பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசும் பலமுறை எச்சரித்தும் மக்கள் ஏமாறுவதும் மக்களை ஏமாற்றுவதும் தொடர்ந்துதான் வருகிறது.

    ஒரு கோடி மோசடி

    ஒரு கோடி மோசடி

    அந்த வகையில் தான் அதிர்ச்சி தரும் விதமாக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் பெயரை வைத்து நடந்துள்ள மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ்க்கும் மோசடி பேர்வழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த டிப்டாப் மோசடி ஆசாமியான சர்க்கரை ராஜா என்பவர் தான் இந்த புகாரில் சிக்கியுள்ளவர். வெள்ளை வேட்டி சட்டை கழுத்தில் செயின் புல்லட் வண்டி என ஒரிஜினல் அரசியல்வாதி போலவே உள்ளூரில் டுபாக்கூர் வேலை காட்டி வந்த அவர் தனக்கு எம்எல்ஏ முதல் அமைச்சர் வரை பலரிடமும் பழக்கம் உள்ளது என ஏமாற்றி வந்ததோடு வெளியூரிலும் கைவரிசை காட்டி வந்திருக்கிறார்.

    ஓபிஎஸ் சித்தப்பா

    ஓபிஎஸ் சித்தப்பா

    அந்த வகையில் அவரிடம் சிக்கியவர் தான் பெரம்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சிவக்குமார். தனது மனைவிக்கு அரசு வேலை வேண்டுமென சர்க்கரை ராஜாவை அவர் அணுகியுள்ளார். அப்போது கடந்த ஆட்சி காலத்தில் முதல் துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது சித்தப்பா எனவும் நிச்சயம் சிவகுமாரின் மனைவிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். அதோடு சிவகுமாரை நம்பி இருப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தனது தலையை மட்டும் வெட்டி ஒட்டி காட்டி இருக்கிறார். இதனை நம்பிய சிவகுமார் சர்க்கரை ராஜாவுடன் 6 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    ஆனால் நாட்கள் பல கடந்தும் வேலை மட்டும் வரவே இல்லை. இது குறித்து கேட்டபோது இன்று நாளை என போலி சாக்குகளை சொல்லி சமாளித்து வந்த அவர் வேலை மட்டும் வாங்கி தரவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிவக்குமார் தனது பணத்தை வேண்டும் என கேட்டபோது போலி காசோலைகளை கொடுத்திருக்கிறார். வங்கியில் இருந்து அது போன வேகத்தில் திரும்பி வந்ததால் மீண்டும் சர்க்கரை ராஜாவை அணுகிய போது தனக்கு அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை அனைவரையும் தெரியும் பணம் கேட்டு தொல்லை செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை


    இதனால் அமைதியாக இருந்த அவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் விசாரித்த போது தான் சர்க்கரை ராஜா சிவக்குமாரை மட்டுமல்ல அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பாலரிடம் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும், அது குறித்த பல்வேறு புகார்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ள போலீசார் சர்க்கரை ராஜாவை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கின்றனர். அதே நேரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+