ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து போகலாம் என ஓபிஎஸ் இந்த 2 பேரிடம் சொன்னார்.. போட்டு உடைத்த ஜேசிடி!
சென்னை : ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் நேரடியாகவே கூறினார் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர்.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளிப்பட்டன.
ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் முயற்சி சிலரால் தடுக்கப்பட்டதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பரபர விசாரணை அறிக்கை
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர் ரிச்சர்ட் பீலே பரிந்துரை செய்தார் என்றும், அதற்கு சசிகலா தடையாக இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றால், அது இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என சுகாதாரத்துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கும் நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜேசிடி பிரபாகர், "ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் பற்றியும் நாங்கள் விரிவாக பார்த்து வருகிறோம். விசாரணை கமிஷன் கொடுத்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்து எங்கள் முடிவுகளையும், கருத்தையும் தெரிவிப்போம்.

ஒரு முக்கியமான விஷயம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த வாக்குமூலங்களை முழுமையாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிடவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் எடுத்து அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் விசாரணையின்போது தெரிவித்த ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே சொல்கிறேன்.

விஜயபாஸ்கர், வேலுமணியிடம்
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றது போல, ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் நேரடியாக கூறினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் எனக் கூறினார்.

அப்பல்லோ தலைவரே
நாங்கள் மற்றவர்களையும் ஆலோசித்து விட்டுச் சொல்கிறோம் என அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனை தலைவரிடம் கலந்துரையாடியுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீடு திரும்புவார், இதனால் இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பல்லோ தலைவரே ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். இந்த விவரத்தை ஆணையத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மனக் கவலை
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவரது மனக் கவலை எல்லாம் இதைவிட சிறப்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும், குணமடைய வேண்டும் என்றுதான் விரும்பினார். விசாரணை ஆணையத்திலும், பொதுவெளியிலும் ஓபிஎஸ் சொல்லி வருவதுதான் உண்மை. ஜெயலலிதா இறந்த மனக்கவலை இன்னும் ஓபிஎஸ் உள்ளத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications