சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“டெட்லைன்”.. இன்று இரவு 12 மணி வரை.. பாஜக, எடப்பாடிக்கு கெடு விதித்த ஓபிஎஸ் டீம்! அதிரவிட்ட மாஜி!

பாஜக, ஈபிஎஸ் அணியினருக்கு இன்று இரவு 12 மணி வரை கெடு விதித்துள்ளார் ஓபிஎஸ் அணியின் கு.ப.கிருஷ்ணன்.

Google Oneindia Tamil News

சென்னை : பாஜகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன என்பதைக் கூற இன்று இரவு 12 மணி வரை கெடு விதித்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து தங்கள் ஆதரவாளர்களோடு தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இருவருமே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளனர். எனினும், இரு அணிகளுமே இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

மேலும், பாஜக ஆதரவு யாருக்கு என்பது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி

அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை

அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் இப்படி பலமுனை போட்டி நிலவும் சூழலில் அதிமுக சார்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், அதிமுகவின் இரு அணிகளின் சார்பிலும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

பாஜக நிலைப்பாடு?

பாஜக நிலைப்பாடு?

ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணியினரும், கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கோரியுள்ளனர். ஆனால், யாருக்கு ஆதரவு என்பது பற்றி பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை. பாஜக போட்டியிடக்கூடும் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில், இன்றும் பாஜக நிர்வாகிகள் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களின் கருத்துகளை கேட்டு கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரூர் வருகை தந்தார். அப்போது அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநகர செயலாளர் ரமேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.ப.கிருஷ்ணன், "திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது இரட்டை இலை. 50 ஆண்டுகால அதிமுக சின்னத்திற்கு தற்போது சோதனை வந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு

கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு தொன்னைக்கு அலைந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்தை இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போட அனுமதித்தால் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம். இன்று இரவு 12 மணி வரை அதற்கான கெடு விதித்துள்ளோம். ஆனால், ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை கைப்பற்ற நினைத்தால் ஈரோடு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணியினருக்கு நல்ல பாடத்தை கற்றுத் தருவோம்.

12 மணி வரை கெடு

12 மணி வரை கெடு

இன்று ஜனவரி 31 இரவு 12 மணி வரை நாங்கள் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்திட தயாராக இருக்கிறோம். காலம் கடத்தப்படும் என்று சொன்னால், நீங்கள் ஒரு ஊசி சின்னத்தில் நில்லுங்கள்.. நாங்கள் பாசிமணி சின்னத்தில் நிற்கிறோம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம்.

யார் தயவும் தேவையில்லை

யார் தயவும் தேவையில்லை

ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள். எந்தக் காலத்திலும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரை பார்த்ததே இல்லை. பாஜக எங்களை இயக்க நாங்கள் சின்னப்பிள்ளைகள் இல்லை. பாஜக இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்பே 1972ல் இருந்து இந்த அதிமுகவை வளர்த்தவர்கள். மக்களின் ஆதரவோடு ஆட்சியை நடத்தியவர்கள். யாருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை.

முடிவு செய்துவிட்டோம்

முடிவு செய்துவிட்டோம்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவு செய்திருக்கிறோம். விரைவில் அறிவிப்போம். பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தோம். இப்போதும் பாஜக எங்களிடம் கேட்டுக் கொண்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆதரவு தருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
OPS supporter Ku.Pa.Krishnan said that the BJP and the Edappadi Palaniswami party have given a deadline of 12 o'clock tonight to state their position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X