இந்த 4 பேரில் தப்பிக்கப் போவது யாரு? 8 செகண்டில் சொல்லுங்க.. 99% பேரால் கண்டுபிடிக்க முடியல!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் 4 நபர்கள் நிற்கின்றனர். அவர்கள் 4 பேரும் ஒவ்வொரு ஆபத்தில் சிக்க உள்ளனர். ஆனால் இந்த 4 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பார். அவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். இருப்பது இல்லாதது போன்றும், இல்லாத ஒன்று இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை காண்பிப்பதால் இத்தகைய படங்களுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படம் என்ற பெயர் வந்தது. இதனை ஆப்டிகல் மாயை என்றும் சொல்வர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போன்றே ஆப்டிகல் புதிர் படங்களும் அதில் மறைந்து இருக்கும் சின்ன டிரிக்ஸால் நம் மூளைக்கு வேலை கொடுக்கும். இத்தகைய புதிர் படங்கள் சில சமயங்களில் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும். நமது கவனிப்பு திறன், நினைவாற்றல், சிந்திக்கும் திறனை சோதிக்கும் வகையில் இருப்பதால் இது போன்ற புதிர் படங்கள் போட்டித் தேர்வுகளிலும் வைக்கப்படுகிறது.
ஒருவரின் ஐகியூ திறன் இது போன்ற புதிர் படங்களை வைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் இத்தகைய படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படம் பலரது மூளைக்கும் வேலை வைத்துள்ளது. உங்களால் இந்த படத்திற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 1, 2, 3, 4 என 4 நபர்கள் நிற்கிறார்கள்.
அவர்கள் 4 பேரும் ஒவ்வொரு ஆபத்தில் இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் பாதுகாப்பாக இருக்கிறார். அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். 8 செகண்டில் கண்டுபிடியுங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. ..8. ஒகே டைம் ஓவர். எந்த நபர் பாதுகாப்பாக இருப்பார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், 1 வது நபர் கார் வருவது தெரியாமல் சாலையை கிராஸ் செய்கிறார். 2 வது நபர் குறுக்கே மரம் இருப்பது தெரியாமல் வேறு திசையை பார்த்துக்கொண்டு செல்கிறார். இதனால் அவர் மரத்தின் மீது மோத வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று 3 வது நபர் தரையில் கத்தி போன்ற ஆயுதம் கிடப்பது தெரியாமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார்.

4 வது நபர் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையில் காலை விடுவது போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார். இப்படி 4 பேரும் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளனர். 4 பேருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று இருக்கையில் இவர்களில் ஒரு நபருக்கு மட்டும் எந்த பாதிப்பு ஏற்படாது. அது எந்த நபருக்கு என்பதையும், அது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க முடிந்ததா?
எப்படி முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் பாதுகாப்பான நபர் யார் என்றால் காருக்குள் இருக்கும் நபரே பாதுகாப்பானவர். ஆனால் படத்தில் இந்த 4 பேர்களில் யார் பாதுகாப்பானவர் என்று கேட்கப்பட்டுள்ளதால், மற்ற 3 பேர்களை காட்டிலும் 1வது எண் கொண்டவரே பாதுகாப்பானவர்.
அது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏனெறால் கார் ஓட்டுபவர் ஒரு உயிருள்ள நபர் ஆவார். எனவே 1வது நபர் கார் வருவது தெரியாமல் சாலையை கிராஸ் செய்தாலும், அந்த காரை ஓட்டி வருபவர் பிரேக் பிடித்துவிடுவதால் 1வது நபருக்கு ஆபத்து ஏற்படாது. எனவே 1வது நபர் என்பதே சரியான விடையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications