சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரை பேசாமல் களமிறக்கி தலைவராக்கிடலாம்.. காங். திடீர் முடிவு.. முக்கிய பொறுப்புக்கு வருகிறார் அவர்?

ப சிதம்பரத்துக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியின், தேசிய தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக ரன்தீப் சுர்ஜேவாலா பொறுப்பில் உள்ளார்... இவர் ஹரியானாவை சேர்ந்த இவர், கர்நாடக காங்கிரஸ் பொது செயலாளராக சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டார்.

P Chidambaram will soon be given a key post in Congress party

அவர் தற்போது, காங்கிரசின், பீஹார் சட்டசபை தேர்தல் நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பீஹார் சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை, அவர் அங்கு தான் முகாமிட வேண்டி உள்ளது.

இந்த சூழலில், தன்னை தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி, ரன்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.. இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் அவர் முன் வைக்க, அந்த பொறுப்புக்கு தகுந்த தலைமையை நியமிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதற்கு அதிக முக்கியத்துவம் தந்து நேரத்தையும் எடுத்து கொண்டுள்ளது கட்சி தலைமை.

காரணம், மிக முக்கியமான ஒருவரைதான் அந்த பொறுப்பில் அமர வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாம்.. அதனால், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அல்லது ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரில் ஒருவரை தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருகிறதாம்.. இந்த லிஸ்ட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பவன் கேரா மற்றும் சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரும் இடம்பெற்றிருந்தாலும், சிதம்பரத்துக்கே அதிக வாய்ப்பு இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கு காரணம், ராஜீவின் மிக நெருங்கிய நண்பரான சிதம்பரத்தின் மீது சோனியாவுக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.. மேலும், பாஜகவை சித்தாந்த ரீதியாக மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல், பொருளாதார ரீதியாகவும் நாசூக்காகவும், அதிரடியாகவும் கையாளக்கூடிய சரியான நபராக இருப்பார் என்பதும் சிதம்பரம் மீது காங்கிரஸ் எப்போதுமே வைத்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

சிதம்பரம் திகாருக்கு சென்று வந்ததில் இருந்தே, அவரது ஒவ்வொரு பேட்டியும், கருத்தும், விமர்சனங்களும் பாஜகவை நிலைகுலைய வைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.. பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு அசைவுக்கும், சிதம்பரத்தை போல் எதிராக குரல் கொடுப்பவர் யாரும் இல்லை.. இப்படி உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுவதும், புள்ளிவிவரங்களுடன் தகவலை எடுத்து வைத்து அவர்களை நறுக்கென கேள்வி கேட்கவும் சிதம்பரத்துக்கு கூடுதல் தகுதியும் உள்ளதாகவே கூறப்படுகிறது.

ராகவேந்திரா மண்டபத்திற்கு வருமானம் இல்லாத காலத்தில் ரூ.6.50 லட்சம் சொத்து வரி - ரஜினி வழக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு வருமானம் இல்லாத காலத்தில் ரூ.6.50 லட்சம் சொத்து வரி - ரஜினி வழக்கு

பாஜகவை பொறுத்தவரை, எதிர்தரப்பில், தங்களைவிட புள்ளிவிவரத்துடன் யாராவது பேசினால் அவர்களைப் பார்த்துதான் அதிகம் பயப்படுவார்கள்... அவர்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கவும் ஜெர்க் ஆகும்.. இதனால், உடனுக்குடன் கவுன்டர் கொடுக்கும் ப.சிதம்பரம் மீது அவர்களுக்கு ஒரு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான், இந்த பொறுப்பு சிதம்பரத்துக்கு தரலாம் என்று மேலிடம் கருதுகிறதாம். ஆக, பாஜகவை அடக்க பல்முனை முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கிவிட்டது மட்டும் தெளிவாகிறது.

English summary
P Chidambaram will soon be given a key post in Congress party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X