நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரை.. பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது.. ஓபிஎஸ்
சென்னை: பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்தார்.
சுயசார்பு திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் அர்ப்பணித்தார். இதையடுத்து விழா அரங்கிற்கு வந்த பிரதமரை முதல்வரும், துணை முதல்வரும் வரவேற்றனர்.

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதல்வரும், துணை முதல்வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசை வழங்கினர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆற்றிய வரவேற்புரையில், பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பிரதமர் மோடி ஜியை வருக வருக என வரவேற்கிறேன். தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் வருகையால் தமிழகம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. சிறந்த முதலீட்டுக்கான தளமாக தமிழகம் மாறி உள்ளது. சிறந்த மாநிலத்துக்கான விருதுகளை தமிழகம் 3 முறை பெற்றுள்ளது. நல் ஆளுமைக்கான மத்திய அரசு விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்டவைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ஐஐடிக்கு 163 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் ஜெயலலிதா.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடைந்த போது பிரதமர் மோடி கண்ணீர் மல்க ஆற்றிய உணர்ச்சிவயமான உரையை நாம் பார்த்தோம். பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications