ஜாமீனில் வந்த “அறிவு”.. நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டம்.. அற்புதம்மாளின் நெகிழ்ச்சி அறிக்கை.!
சென்னை : 'விடுதலை' என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்வை என்ற நிலையில் கிடைத்திருக்கிற இந்த பிணை ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜாமினில் வெளி வந்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.
இவர்களில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, தற்போது 7 பேரும் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளனர். அவர்களில் பேரறிவாளனுக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் , இன்று அவர் வெளி வந்தார்.

அற்புதம்மாள் அறிக்கை
இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டமிது 'விடுதலை' என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கிற இந்த பிணை ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புதல்வன் உள்ளிட்ட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை உங்கள் அனைவரின் ஆதரவு அவசியம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் போராட்டம் தொடர்கிறது.

நீதிக்கான போராட்டம்
இதுவரை காலமும் எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் மாண்புமிகு முதல்வர் மற்றும் தமிழக அரசிற்கும், மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

அன்பு மகள் செங்கொடி
என்னுள் நினைவுகளாக உறைந்துவிட்ட அன்பு மகள் செங்கொடியை நெஞ்சில் ஏந்தி இத்தனை ஆண்டுகளாக எனது புதல்வனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவு சுற்று வரும் ஊடக நண்பர்கள், திரைப்படத்துறை நண்பர்கள், வழக்கறிஞர்கள், மாணாவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தாய்மார்கள் மற்றும் பொது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அற்புதம்மாள் நம்பிக்கை
தமிழகத்திலும் தமிழகம் தாண்டியும் உள்ள வெகுமக்களின் ஆதரவும் புரிதலுமே 31 ஆண்டுகளுக்கு பிறகாவது இந்த நிலையை எட்டக்கூடிய வாய்ப்பை தந்துள்ளது. எனவே அவரவர் சக்திக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக இத்தனை ஆண்டுகளும் உதவியாக இருந்த அனைவரையும் தனித்தனியே சந்தித்து நன்றி கூற விருப்பம் இருப்பினும் தற்போது அது சாத்தியமற்றது என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

நெஞ்சார்ந்த நன்றி
முழுமையான விடுதலை கிடைத்து அதற்கான சூழல் ஏற்படும் நாளில் விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவக்கும் நன்றி சொல்லும் வாய்ப்புகளாக நானும் அறிவும் காத்திருக்கிறோம். எனவே தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள இந்த இடைக்கால பிணையின் போது அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அறிவுக்கு பிணை கிடைக்க காரணமான அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications