Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை.. மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்துள்ளது.

Petrol, diesel price hiked once again: Today rate in Chennai and other metros

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தினமும் 30 பைசா, 20 பைசா என்ற அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் 104.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ. 100.59க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களில் மாநில அரசின் வரி குறைப்பும் இல்லாத காரணத்தால் பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலை 113.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 104.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது.

தற்போது டெல்லியில் பெட்ரோல் 107.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 96.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பெங்களூரில் பெட்ரோல் விலை 108.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 100.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 105.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 101.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+