• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்!

|

சென்னை: நல்லவேளை.. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்று நேற்றுதான் நினைக்க தோன்றியது. இருந்திருந்தால் இதற்கெல்லாம் 0% அளவுக்குக் கூட வாய்ப்பே இல்லை என்பது வேறு விஷயம்.

பாஜக மீது ஜெயலலிதாவுக்கு மனஸ்தாபம் 10 வருடத்திற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை தவிர வேறு எந்த பாஜக தலைவர்களையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. கூட்டணி வைக்கவும் விரும்பவில்லை. பாஜகவை தூர ஒதுக்கி மூலையில் முடக்கியிருந்தார்.

இதற்காக 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அத்வானி எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அது ஜெ. முன்பு ஒன்றும் வேலைக்காகவில்லை. 2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி சேருமோ என்ற ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கும் ஜெ. அசைந்து கொடுக்கவில்லை.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாத விசிக.. தேர்தல் ஆணையத்தில் இன்று சின்னம் ஒதுக்கீடு

ஜெ. பிடிவாதம்

ஜெ. பிடிவாதம்

37 எம்பிக்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி என்னமோ அன்றைக்கு முன்வரத்தான் செய்தார். ஆனால் ஜெ.தான் அதை பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்த பிடிவாதம் அவரது மறைவு வரை உறுதியாக நீடித்தது. அதாவது கடைசி வரை அவர் பாஜகவே அதிமுக பக்கமே அண்ட விடாமல் கட்சியைக் காப்பாற்றி வந்தார். ஆனால் நேற்று நடந்த காட்சி இது அத்தனையையும் பொடிப்பொடியாக்கி விட்டது.

தலைமை அலுவலகம்

தலைமை அலுவலகம்

அதிமுகவின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் அது ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்தான் நடக்கும். ஜெ. வருவதற்கு முன்பே தொண்டர்கள் குவிந்து கிடந்து காத்து கிடப்பார்கள். ஆனால் நேற்று கூட்டணி தொகுதிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பியூஷ்கோயலும் வந்திருந்தார். ஆனால் எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தொண்டர்கள் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மிஸ்ஸிங்!

[

ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019
]

நடுவில் பியூஷ்கோயல்

நடுவில் பியூஷ்கோயல்

அதை விட முக்கியமானது.. கூட்டணிக் கட்சிகளின் தலைவர் யார் என்ற குழப்பம் நேற்று வெட்ட வெளிச்சமாகியது. வழக்கமாக நடு நாயகமாக ஜெயலலிதா அமர்ந்திருப்பார். நேற்று அவரது இடத்தில் பியூஷ் கோயல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வலதிலும், இடதிலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் அமர்ந்திருந்தனர். அவர் தான் பேசினார். அதை தமிழிசை மொழிபெயர்க்க வேறு செய்தார். மற்றவர்கள், அதிமுக தலைவர்கள் உள்பட, அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். அதிமுக தலைவர்கள் பேசினார்களா என்று தெரியவில்லை. ஆனால் பியூஷ் கோயல் பேசுவது போன்ற விஷூவல் மட்டுமே வெளியே வந்தது.

தொண்டர்கள் ஷாக்

தொண்டர்கள் ஷாக்

இதனை பார்த்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடையவே செய்தனர். கூட்டணியின் தலைவர் அப்படியானால் பாஜகவா, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் பியூஷ் கோயல் நடு நாயகமாக உட்கார்ந்து பேசியதை எப்படி அதிமுக மேல் மட்டத் தலைவர்கள் அனுமதித்தனர். அம்மா உட்கார்ந்த இடத்தில் பாஜகவா, ஜீரணிக்க முடியலையே என்று அதிமுகவினர் புலம்புகின்றனராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
BJP Leaders Piyush goyal and Tamizhisai Soundarajan have come to ADMK Head Office in Chennai Royapettah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more