சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழில் சிறு சிறு வாக்கியங்களை பேச பயிற்சி எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் 'மனதின் குரல்'(மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வழியாக பேசி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட 'மனதின் குரல்' நிகழ்ச்சி அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. இதில் பேசுவது மட்டுமின்றி பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

PM Modi is training to speak short sentences in Tamil

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் மனதில் குரல் நிகழ்ச்சி முழுவதும் தமிழில் ஒலிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச உள்ளார். இதற்காக பிரதமர் இப்போதே தயாராகி வருகிறார். சிறு சிறு வாக்கியங்களை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலிருந்து 8 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி போனில் தமிழில் பேசுவார். இதை ஒலிப்பதிவு செய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு பாஜக டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

 பேனரில் மோடி படம் எங்கே? கொரோனா தடுப்பூசி முகாமில் ரகளை செய்த பாஜகவினர் மீது போலீசில் புகார் பேனரில் மோடி படம் எங்கே? கொரோனா தடுப்பூசி முகாமில் ரகளை செய்த பாஜகவினர் மீது போலீசில் புகார்

English summary
Prime Minister Narendra Modi is training to speak short sentences in Tamil. It has been announced that the entire Mind Voice program will be telecast in Tamil at the beginning of the Tamil New Year in April next year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X