சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த 10 கோரிக்கைகளுக்காக தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம்… பட்டியலிட்டு விளக்கிய டாக்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த காரணங்களுக்காக தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம் - விளக்கிய ராமதாஸ் -வீடியோ

    சென்னை:அதிமுகவுக்கு பாமகவின் 10 கோரிக்கைகளின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. சென்னையில் இவ்விரு கட்சிகளிடையே நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் வரும் லோக்சபா தேர்தலில் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு... அதிமுக, பாமக இடையேயான லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

    பாமக ராமதாஸ் பேட்டி

    பாமக ராமதாஸ் பேட்டி

    அதன்பிறகு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவுடன் வரும் லோக்சபா தேர்தலில் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி மக்கள்நல கூட்டணி.. மெகா... கூட்டணி... வெற்றி கூட்டணியாக இது வளரும்.

    கூட்டணி வெற்றி

    கூட்டணி வெற்றி

    புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது. சென்ற லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது நினைவிருக்கும். அதிமுகவுடன் பாமக ஏன் கூட்டணி என்பதை ...பிரத்யேகமான சந்திப்பில் விரைவில் அன்புமணி சொல்ல இருக்கிறார். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வார்.

    10 கோரிக்கைகள் வைத்துள்ளோம்

    10 கோரிக்கைகள் வைத்துள்ளோம்

    தமிழக மக்களின் நலன்களுக்காக முதல்வர், துணை முதல்வரிடம் 10 கோரிக்கைகளை பாமக முன் வைத்திருக்கிறோம்.. அந்த கோரிக்கைகளை இப்போது சொல்கிறன்.

    காவிரி பாசன மண்டலம்

    காவிரி பாசன மண்டலம்

    காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் முக்கியமான தீர்மானம். அதிமுக ஏற்கனவே சட்டசபையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

    மதுக்கடைகளை மூடவேண்டும்

    மதுக்கடைகளை மூடவேண்டும்

    தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும், மேகதாது அணை கட்டும் சதியை முறியடிக்க வேண்டும், பொதுத் துறை கூட்டுறவு வங்கிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    நீட் தேர்வில் விலக்கு

    நீட் தேர்வில் விலக்கு

    நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மேகதாது அணையில் கர்நாடக அரசின் சதியை முறியடிக்க வேண்டும் என்ற 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

    நன்றி தெரிவித்த ராமதாஸ்

    நன்றி தெரிவித்த ராமதாஸ்

    லோக்சபா தேர்தலில் பாமக எந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அன்பு மணி பின்னர் விளக்குவார். நன்றி... நன்றி.. நன்றி.. வணக்கம் என்று ராமதாஸ் கூறினார்.

    English summary
    The party's founder Dr Ramadoss said that the AIADMK has signed the coalition on the basis of 10 demands of the PMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X