அடடே நம்ம தனுஷ்! ஹாலிவுட் படத்துல கலக்கிட்டீங்க! நீங்க நல்லா வரனும்.. அன்புடன் பாராட்டிய அன்புமணி!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஹாலிவுட் படமான "தி கிரே மேன்" படத்தை ஓடிடியில் பார்த்ததாகவும், நடிகர் தனுஷை கண்டு பெருமைப்படுகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடந்த மூன்று நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபநீர் திட்டத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார்.
மூன்று நாட்கள் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இந்தத் திட்டம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கில் கையெழுத்து பெற்றார்.

அன்புமணி ராமதாஸ்
சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ள அன்புமணி ராமதாஸ் தற்போது தனது ட்விட்டரில் நடிகர் தனுசை பாராட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அன்புமணி ராமதாஸின் இந்த ட்விட்டர் பதிவை பார்க்க பாட்டாளி மக்கள் கட்சியினரும், நடிகர் தனுஷ் ரசிகர்களும் அதனை சமூக வலைதளங்களில் வேகமாக பதிந்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ்
எதற்காக நடிகர் தனுஷை அன்புமணி ராமதாஸ் பாராட்டினார் என பார்ப்போம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருந்த தி கிரே மேன் திரைப்படம் வெளியானது கேப்டன் அமெரிக்கா அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமான ஜோ ருஸோ அந்தோனியோ ருஸோ சகோதரர்கள் இணைந்து உருவாக்கி இருந்த தி கிரே மேன் netflix தளத்தில் வெளியாகி இருந்தது.

தி கிரே மேன்
ஹாலிவுட் பிரபலங்களான க்ரிஷ் எவன், ரயான் கோஸ்லிங் உள்ளிட்டவுடன் தனுஷ் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பல ஹாலிவுட். கோலிவுட். நடிகர்களும் நடிகர் தனுசை பாராட்டி இருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தில் குறைந்த நேரமே வந்த நடிகர் தனுஷ் இந்த பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர்கள் கூறியிருந்ததை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர்.

ட்விட்டரில் பாராட்டு
இந்நிலையில் தான் இந்தப் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"நேற்று படம் 'தி க்ரேமேன்' பார்த்து மகிழ்ந்தேன். ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் பற்றி பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வர எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications