மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி - பாமக நிழல் பட்ஜெட்

காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும் என பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன் பாமக சார்பாக நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்.

சென்னை தியாகராய நகரில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மின்கட்டணம் குறைப்பு

மின்கட்டணம் குறைப்பு

தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும். அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநில கல்விக் கொள்கை

மாநில கல்விக் கொள்கை

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு இயைந்த வகையில், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கல்வியாளர்களையும், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களையும் கொண்ட வல்லுநர் குழு ஓரிரு நாட்களில் அமைக்கப்படும். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது.

பள்ளிக் கல்விக்கு ரூ.75,000 கோடி

பள்ளிக் கல்விக்கு ரூ.75,000 கோடி

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.37,500 செலவிடப்படும்.

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

அருகமைப் பள்ளி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநிலப் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தால், அவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பள்ளியில் தானாக இடம் ஒதுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

உயர்கல்வி

உயர்கல்வி

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

கல்விக் கடன்கள் தள்ளுபடி

கல்விக் கடன்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

மருத்துவ ஸ்மார்ட் அட்டை

மருத்துவ ஸ்மார்ட் அட்டை

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். அது குறித்த விவரங்களை பதிவு செய்ய மருத்துவ தகவல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் தமிழக மக்கள் எந்த ஊரிலும், எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பெற முடியும். அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, எவருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 1,303&லிருந்து, 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும். 2025ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 50 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இது 150 இடங்களாக உயர்த்தப்படும். மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

சட்டம் - ஒழுங்கு

சட்டம் - ஒழுங்கு

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
காவல்துறையினரின் நலன்களைக் காக்க அமைக்கப்பட்டுள்ள 4ஆவது காவல் ஆணையத்தின் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

வன்னியர் இடஒதுக்கீடு

வன்னியர் இடஒதுக்கீடு

வன்னியர் உள்இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு புத்துயிரூட்ட உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வன்னியர் உள்ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்

தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
ஆந்திராவில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அனைத்து சாதிகளின் முன்னேற்றத்திற்கும் தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும்.

 வேளாண்மை

வேளாண்மை

வேளாண்துறைக்கு 2022-23ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கப்படும். 2022 - 23ஆம் ஆண்டு வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 2,654இல் இருந்து 3,500ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.

அறுபது இலட்சம் டன் நெல் கொள்முதல் - ரூ.3,000 கோடி ஊக்கத்தொகை

அறுபது இலட்சம் டன் நெல் கொள்முதல் - ரூ.3,000 கோடி ஊக்கத்தொகை


2020-21ஆம் ஆண்டில் 39.39 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2022&23ஆம் ஆண்டில் 60 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,600 விலை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.
மணல் குவாரிகள் திறக்கப்படாது

மணல் குவாரிகள் நிரந்தரமாக மூடப்படும்

மணல் குவாரிகள் நிரந்தரமாக மூடப்படும்

தமிழ்நாட்டில் 48 மணல் குவாரிகளும், 62 இடங்களிலும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. கொரோனா மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்தக் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்ட நிலையில், அவை நிரந்தரமாக மூடப்படும். எந்த மணல் குவாரியும் இனி திறக்கப்படாது.

பனை மரம் நடும் திட்டம்

பனை மரம் நடும் திட்டம்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும். வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.

தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம்

தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான, தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும் படி மத்திய அரசை தமிழக அரச வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.

கொள்ளிடம் தடுப்பணைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.396 கோடி நிதி செலவழித்துவிட்டதால் கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூலை மாதத்தில் கொள்ளிடம் தடுப்பணை திறக்கப்படும்.

2022-23ஆம் ஆண்டு முதல் 2025-26 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 தமிழ்நாடு பருத்திக் கழகம் அமைப்பு

தமிழ்நாடு பருத்திக் கழகம் அமைப்பு

கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் மலிவு விலையில் பருத்தி இழை நூல் கிடைப்பதை உறுதி செய்யவும், பருத்திக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு பருத்திக் கழகம் (Tamilnadu Cotton Corporation) என்ற நிறுவனம் தொடங்கப்படும். உழவர்களிடம் இருந்து பருத்திப் பஞ்சை வாங்கி, அதை நூலாக்கி விற்பனை செய்யும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

சுங்கக் கட்டணம்

சுங்கக் கட்டணம்

முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும், பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும். சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை மாதவரம் - சிறுசேரி சிப்காட், சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூர், சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும். 2026ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பாண்டில் தொடங்கப்படும்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

01.06.2006 அன்று பணிநிலைப்பு செய்யப்பட்ட 45,000 ஆசிரியர்கள் அதற்குமுன் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களின் பணிக்காலமாக சேர்க்கப்படும். இக்காலத்திற்கான ஊதிய நிலுவையும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும்.

கீழடி அகழாய்வு - விரைவில் அறிக்கை

கீழடி அகழாய்வு - விரைவில் அறிக்கை

கீழடி அகழாய்வின் 5, 6 மற்றும் 7ஆம் கட்ட அறிக்கைகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து சென்று உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதற்காக இணையவழி தமிழ் கற்பித்தல் சேவை தொடங்கப்படும். இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ் கற்பிக்கப்படும்.

பத்திரிகையாளர்களுக்கு மடிக்கணினி

பத்திரிகையாளர்களுக்கு மடிக்கணினி

இணையவழியில் தமிழ் கற்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும். அதன்படி, பத்திரிகையாளர்கள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி மடிக்கணினி பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+