2026 தேர்தலில் அதிமுக, திமுகவுடன் பாமக கூட்டணி இல்லை- முதல்வர் வேட்பாளர் அன்புமணி: டாக்டர் ராமதாஸ்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) கூட்டணி அமைக்காது என்றும் பாமக இளைஞரணித் தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலின் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழகத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது பாமக. ஆனால் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வியைத்தான் சந்தித்தது.
இதனையடுத்து 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றது. தற்போது பாமகவுக்கு 5 எம்.எல்.ஏக்கல் உள்ளனர். சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது முதல் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது பாமக. இதனால் பாமக- திமுக கூட்டணிக்கு சாத்தியமா? என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை.

திமுகவின் ஆட்சி
இந்த நிலையில் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு டாக்டர் ராமதாஸ் விரிவான பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் 100 நாட்களில் பெரிதாக பேசவும் குறை சொல்லவும் எதுவும் இல்லை. ஆனால் மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெரிகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன். தற்போதைய திமுக நட்சி நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

வன்னியர் இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கு சமூக நீதி பற்றிய புரிதல் இல்லை. சமூக நீதி பற்றிய அறிவு இல்லை. சமூக நீதி குறித்து அறியாமல் பேசுகின்றனர். என்னிடம் அவர்கள் வந்தால் பாடம் நடத்தி 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து புரிய வைக்க முடியும்.

அதிமுக-திமுகவுடன் கூட்டணி இல்லை
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை தற்போதைய கூட்டணி நீடிக்கும். எங்களது இலக்கு 2026 தேர்தல்தான். அரசியலில் மாற்றங்கள் வந்துதான் தீரும். லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் சூழ்நிலைகள் பொறுத்து முடிவெடுப்போம். ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் திமுக, அண்ணா திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காது. 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு. அதனை நோக்கித்தான் நாங்கள் பயணப்படுகிறோம்.,

அன்புமணி முதல்வர் வேட்பாளர்
பாமகவின் இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்வராக்கப்பட வேண்டும். மாற்றம், முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் என்பது நிறைவேற வேண்டும். அன்புமணி ராமதாஸும் கூட, ஓராண்டு காலம் என்னிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள்.. நல்லாட்சியை தர முடியும். அப்படி செய்யாமல் போனால் பதவியை விட்டு விலகிவிடுகிறேன் என்கிறார். தமிழக இளைஞர்கள் அனைவரும் அன்புமணி ராமதாஸுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications