Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக ஊடகங்களில் இயங்குவோருக்கு கண்ணியம் முக்கியம்.. கவிஞர் வைரமுத்து அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை : எல்லைக்குள் இயங்குவதே எள்ளல் எனவும், சமூக ஊடகங்களில் இயங்குவோர் இந்த கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்கு அடுத்தபடியாக தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களால் கவிப்பேரரசு என கொண்டாடப்படுபவர் கவிஞர் வைரமுத்து. சினிமா தாண்டி இலக்கிய உலகிலும் தனி இடத்தைப் பெற்றுள்ள அவரது கவிதைத் தொகுப்புகளும் நாவல்களும் ஏராளம்.

டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் கண்ணியக் குறைவாக பதிவிடும் சம்பவங்களும் தனிப்பட்ட விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில் எல்லைக்குள் இயங்குவதே எனவும் சமூக வலை தளங்களில் இயங்கும் ஓர் இந்தக் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

Poet Vairamuthu has commented that those who operate on social media should adhere to dignity

இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்க அழைத்தார்கள், நடிகர்களெல்லாம் கஷ்டப்பட்டு நடித்தார்கள்; நாமும் கஷ்டப்பட்டுப் பார்த்தோம்", சொன்னவர் ராஜாஜி பார்க்கப்பட்டது பாலசந்தர் நாடகம், இப்படி எல்லைக்குள் இயங்குவதே எள்ளல், சமூக ஊடகத்தார் - இந்த கண்ணியத்தையல்லவோ கைக்கொள்ள வேண்டும்? என அவர் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகம் என்பதும் நெருப்புப் போலவே அளவாய் உபயோகித்தால் அது தீக்குச்சி அளவற்று உபயோகித்தால் காட்டுத் தீ போல என்பதை உணராமல் நிறைய பேர் காட்டுத் தீயை கையாள்கிறார்கள் ஐயா எனவும், அருமை கவிஞரே! எள்ளல் எட்டி வை! கைக் கொள்ளல் கட்டி வை! எனவும், ஏராளமானோர் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+