கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்... வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது
திருப்பத்தூர் : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறப்பட்ட நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதில் மாணவர் அமைப்பினர் இணைந்தனர். அந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

கலவரத்தின்போது சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் சென்ற ஒரு கும்பல், பள்ளி வாகனங்களையும், சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தியது. வேறு சில கும்பல், இந்த சூழலை தங்களுக்கு சாதகமகப் பயன்படுத்திக்கொண்டு, பள்ளியில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், குளிர்சாத பெட்டி உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.
இதற்கிடையே நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். பின்னர் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம், தமிழகம் முழுக்க காட்டுத்தீயாக பரவி, தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி, வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல் என்ற இளைஞர், வாட்ஸ்அப் குழு அமைத்து, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோகுலை கைது செய்து, கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர், உயிரிழ்ந்த பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17-ந் தேதி, எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் என்பவர், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Recommended Video
இந்தப் புகாரின் பேரில், கிராமிய காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வீண் வதந்தியை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications