நம்பர் பிளேட் எங்க தங்கம்! ஓசி காரில் கெத்தாக வலம் வந்த TTF வாசன்! கொத்தாக தூக்கி ஃபைன் போட்ட போலீஸ்
சென்னை : படம் பார்ப்பதற்கு நண்பரின் ஓசி காரில் கெத்தாக வந்து இறங்கிய டிடிஎஃப் வாசனை கொத்தாக தூக்கி உட்கார வைத்த போலீசார் நம்பர் பிளேட் இல்லாத காரை சாலையில் இயக்கியதற்காக அபராதம் விதித்து இருக்கின்றனர். காரில் ஏற்றிய கொடுமைக்கு 500 ரூபாய் ஃபைனை கட்டி இருக்கிறார் காரின் உரிமையாளர்.
சேர்ந்தே இருப்பது டிடிஎஃப் வாசனம் சர்ச்சைகளும் என்று ஆகிவிட்டது. 2கே கிட்ஸ்களின் ஹீரோவாக தன்னை காட்டிக் கொள்ளும் வாசன் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தனது பிறந்தநாளின் போது ரசிகர்கள் சந்திப்பில் கூடிய கூட்டம் பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கவனிக்கத்தக்க நபராக மாறினார் வாசன். அதோடு சேர்ந்து அவரை சர்ச்சை வளையங்களும் சூழ்ந்து கொண்டது.

டிடிஎஃப் வாசன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கடலூருக்கு வந்த டிடிஎஃப் வாசனை காண 2கே கிட்ஸ் கூட்டம், காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூடியதாலும் வாசனின் ரசிகர்களின் அடாவடித்தனத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது பேச்சு இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.

நம்பர் பிளேட்
இந்த நிலையில் சென்னையில் காரில் நம்பர் பிளேட் இல்லாததால் டிடிஎஃப் வாசன் வந்த காருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளனர். காரின் உரிமையாளரான பிரவீன் என்பவர் அபராத தொகையை கட்டி உள்ளார். மேலும் நம்பர் பிளேட்டை ஒட்டி காரை எடுத்துச் செல்லுமாறு கூறி காரை வடபழனி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது.

அபராதம்
நடிகர் லிங்கேஷ் மற்றும் யூட்யூபர் டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர். டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால் அவருக்கென்று தனி 2கே கிட்ஸ் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்காக கமலா திரையரங்கு வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை
அப்போது டிடிஎப் வாசன் வந்திறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நம்பர் பிளேட் இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்து துறை போலீசார் டிடிஎப் வாசன் வந்த காரை ஆய்வு செய்தனர். அதில் பதிவெண் இல்லாமல் இருந்ததால் ஸ்பாட் ஃபைனாக 500 ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும் காரில் ஏற்றிய கொடுமைக்கு காரின் உரிமையாளரான பிரவீன் அந்த அபராத தொகையை கட்டியுள்ளார். மேலும் நம்பர் பிளேட்டை ஒட்டி காரை எடுத்துச் செல்லுமாறு கூறி காரை வடபழனி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்களிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படும் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications