அப்பாகிட்ட சொல்லிடுங்க..எஸ்.ஆர்.எம் விடுதியில் திறக்காத கதவு! திறந்து பார்த்தால்.. காத்திருந்த ஷாக்!
சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அருகே பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக் பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

வடமாநில மாணவர்
இந்நிலையில் B-TECH முதலாம் ஆண்டு பயின்று வரும் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சோங்காப்பூர் ரயில்வே நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாத்(19) என்கிற மாணவன் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்று விட்டு தனது தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் உள்ள (காரி) விடுதியில் தங்கியுள்ளார்.

மர்ம மரணம்
கடந்த இரண்டு நாட்களாக முகிலு விஸ்வநாத் உடைய அறை கதவு திறக்காமல் இருந்த நிலையில் சந்தேகம் அடைந்த சக நண்பர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதனை எடுத்து முகுலு விஸ்வநாத் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருப்பதை பார்த்த சக நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணை
விடுதி மாணவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்குறைவுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடிதம் சிக்கியது
கல்லூரி வகுப்பு துவங்கி சில வாரங்களில் ஆன நிலையில் கல்லூரி மாணவன் உயிரிழந்திருப்பது மாணவர்களிடையும் பெற்றோர்களிடமும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாணவன் தனது கை பட எழுதிய லெட்டர் கிடைத்துள்ளது. அதனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடித்தத்தில் மாணவர் தனது தந்தையிடம் தகவல் தெரிவிக்க வேண்டி தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications