செம.. ரூ 1000 + பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்.. அதிரடியாக தொடங்கி வைத்த முதல்வர்.. குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்குகிறது. சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகர் குடியிப்பில் மக்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கி முதலமைச்சர் இதனை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசுலேயே பெரிய தொகையாகும். இதனையடுத்து 2022ம் ஆண்டு பரிசு தொகை எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக முந்திரி திராட்சை என 21 பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அதில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்தன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இம்முறையும் இவ்வாறு சர்ச்சை எழுந்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. எனவு பரிசு பொருட்களுடன் சேர்ந்து ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

டோக்கன்

டோக்கன்

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பரில் வெளியிட்டிருந்த நிலையில் டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டன. கடந்த 3ம் தேதி தொடங்கப்பட்டது. தினமும் 200-250 அட்டைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இப்பணிகள் நேற்றுடன்(ஜன.08) முடிவடைந்தன. நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 94% குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் சென்று ரொக்கத்துடன் கூடிய பரிசு தொகையை பெற்றுக்கொள்ளலாம். அதே போல விடுபட்டவர்கள் வரும் 13ம் தேதி சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை தமிழர்களுக்கும்

இலங்கை தமிழர்களுக்கும்

இதற்காக மொத்தமாக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,19,33,342 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும். மட்டுமல்லாது முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசு தொகை வழங்கப்படும். தொடக்கத்தில் பரிசு தொகையும், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கரும்பும் வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேபோல திமுகவின் கூட்டணி கட்சிகளும் கரும்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.

கரும்பு

கரும்பு

இதனையடுத்து கரும்பு கொள்முதல் செய்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 6 அடி உயரமுள்ள கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கரும்பை கொள்முதல் செய்வதிலும் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்தன. அதாவது 6க்கும் குறைவாக கரும்புகளை விளைவித்த விவசாயிகள் இந்த உத்தரவால் கடுமையாக பதிக்கப்பட்டனர். எனவே 6 அடிக்கும் குறைவாக உள்ள கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். சில இடங்களில் விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

 பயோமெட்ரிக்

பயோமெட்ரிக்

இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், முதலமைச்சர் இந்த பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசு விநியோகிக்கப்படும். இதற்காக 13ம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படும். 13ம் தேதிக்கு மாற்றாக வரும் 27ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள நிலையில் இதன் மூலம் அடையாளத்தை சரிபார்த்து பரிசு பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்குரிய கையேடும் தயார் நிலையில் இருப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+