ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு..முதல்வர் அவசர ஆலோசனை..வெளியாகும் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன்,பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகையாக கடந்த ஆண்டு 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாக புகார் எழுந்தது. வெல்லம் உருகிவிட்டதாகவும் கலப்பட பொருட்களாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் இந்த ஆண்டு ரேசன் அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமா? ரேஷன் கடைகளின் மூலம் வழங்கலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாயுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14.9 லட்சம் அட்டைகளில் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ரேசன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 குறித்த அறிவிப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications