சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கலுக்கு 16,221 பேருந்துகள் இயக்கம் : எந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும் - முழு விபரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆம் தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கலுக்கு பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 15,270 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆம் தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கலுக்கு பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 15,270 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Pongal Special bus : 5 bus terminals special buses to be operated in Chennai

சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஆண்டுதோறும் பண்டிகை தினங்களில் இயக்கிவருகிறது.

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

Pongal Special bus : 5 bus terminals special buses to be operated in Chennai

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆம் தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கலுக்கு பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 15,270 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Pongal Special bus : 5 bus terminals special buses to be operated in Chennai

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு 13 மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கோயம்பேட்டில் 10 மையங்களும் தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும் பூவிருந்தவல்லியில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்படும் என்று கூறினார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள்:

மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

கே.கே.நகர் பேருந்து நிலையம் :

ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்:

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தசி செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம்:

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர், பெங்களூருக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கலுக்குப் பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

English summary
16,221 special buses will run on January 11, 12 and 13 ahead of the Pongal festival. Transport Minister Vijayabaskar has said that 15,270 buses will be operated after Pongal to return from their hometowns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X