நோட் பண்ணிக்குங்க.. இந்த தேதியில் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது: போக்குவரத்து துறை அறிவிப்பு
16-ம்தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் 14,15,16 ஆகிய 3 நாட்கள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது... இந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது..
இதற்காக தமிழக அரசும், ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் மக்களுக்காக இயக்கி வருகிறது.. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு பேருந்துகள்
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.. அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என இன்று முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்தது. கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு
சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள், ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கம் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிறப்பு பேருந்துகள்
இந்நிலையில், வருகிற ஜனவரி 16-ம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது... தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம், அரசு பேருந்தில் வெளியூர் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு செலுத்திய முன்பதிவு கட்டணம் 2 நாட்களில் திருப்பித் தரப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
அதேபோல, 16ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் இன்னொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதன் காரணமாக அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்புவோர் மறுநாள் திங்கள் கிழமைதான் பயணிக்க முடியும்.. இதனிடையே, கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications