என்னது சசிகலா வரப்போறாரா? ஒன்றரை வருஷமா இல்லாம இதென்ன புது ட்விஸ்ட்? அலெர்ட் ஆகுங்க.. பறந்த உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக" என சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு உச்சமடைந்து வரும் நிலையில், சசிகலா அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவை கைப்பற்றுவேன் என சசிகலா கூறி வரும் நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே சசிகலாவை அலுவலகத்திற்கு வரவேற்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

3 அணி?

3 அணி?

அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்டுள்ள மோதலால் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து ஜுலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றம் மற்றம் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர். இதற்கிடையே ஆட்டத்தில் சசிகலாவும் களமிறங்கி 2 அணி இல்லை, 3 அணி எனச் சொல்லாமல் சொல்லி வருகிறார்.

சசிகலா

சசிகலா

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் சசிகலா. முதற்கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக கட்சிக் கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் சசிகலா. சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி சென்றார் சசிகலா.

 சுற்றுப் பயணத்தின் நோக்கம்

சுற்றுப் பயணத்தின் நோக்கம்

அ.தி.மு.க குழப்பங்களுக்கு மத்தியில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி வாரியாக அடுத்தகட்ட சுற்றுப்பயணங்களுக்கும் அட்டவணை வெளியிட்டுள்ளார் சசிகலா. வரும் ஜூலை 3ஆம் தேதி கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்று தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் குமணன்சாவடியிலிருந்து தொடங்கி திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களைச் சந்திக்கிறார். ஜூலை 5ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், 7-ஆம் தேதி வானூரிலும், 8ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும் சுற்றுப் பயணம் செய்கிறார்.

போஸ்டர் யுத்தம்

போஸ்டர் யுத்தம்

இதற்கிடையே, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே போஸ்டர் யுத்தமே நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித்தனியாக ஒற்றைத் தலைமை தொடர்பாக போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களமிறங்கியுள்ளனர்.

வருக வருக

வருக வருக

"அதிமுகவின் பொதுச் செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே! கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக!" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகேயுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சசிகலாவும் இணைந்துள்ளதாக பரபரப்பு கூடியுள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

ஏற்கனவே அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள அப்பகுதியின் லோக்கல் கழகத்தினர் அதிமுக தலைமை அலுவலகம் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்குமாறு சீனியர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். மேலும், தலைமைக் கழக ஊழியர்களும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இதுவரை வராமல்

இதுவரை வராமல்

கடந்தாண்டு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி சென்னை வந்தபோதே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அலுவலகத்தின் ஒரு கதவை பூட்டியே வைத்திருந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிமுக அலுவலகத்திற்கு வர முயலாத சசிகலாவை வரவேற்று திடீரென போஸ்டர்கள் முளைத்துள்ளதால், சசிகலாவின் திட்டம் என்ன என அதிமுகவினர் குழம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+