அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டர் விலை... சென்னையில் விலை என்ன தெரியுமா?
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 96 குறைந்துள்ளது. இதன்மூலம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
அண்மைக் காலமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சரிவிலும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றியும் உள்ளன. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட் கையை கடித்தது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,000க்கும் அதிகமாக இருப்பதால், டீ, காபி, உணவு பொருட்களின் விலைகள் சில இடங்களில் அதிகரிக்க தொடங்கின. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.

சிலிண்டர் விலை
இதனால் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. ஒவ்வொரு மாதமும், 1ம் தேதியன்று, இதுகுறித்து பெரும் விவாதமே சமூக வலைதளங்களில் எழுந்து வந்தது.

சிலிண்டர் விலை குறைப்பு
இந்த நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை ரூ.95 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,141க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,045க்கு விற்பனையாகும்.

5 மாதமாக குறைப்பு
இதேபோல் டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 5 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் ரூ.2,219க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர், இப்போது பல்வேறு மாநிலங்களிலும் ரூ.1,976.50க்கு விற்பனையாகி வருகிறது.

மாற்றமில்லை
இருந்தும், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஜூலை மாதம் முதல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications