அடுத்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி.. கோவை, செங்கோட்டை மக்களுக்கு நல்ல செய்தி
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். வரும் ஏப்ரல் 8ம் தேதி அன்று ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாக சென்னை- கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தையும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 294 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக நாட்டின் அதிவேக ரயில்சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் சென்னை கோவை இடையே இயக்குவதற்கு தெற்கு ரயில்வே பரிசீலித்து வந்தது. அந்த ரயில் சேவை 8ம் தேதி துவக்கப்பட உள்ளது.
ஏற்கனவே திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், அங்கு இரண்டு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு, அந்த ரயில்கள் இயக்கமும் துவங்கப்பட இருக்கிறது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் மும்முறை இயக்கக்கூடிய ரயில்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
நாட்டின் அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்பட்டு வருகிறது தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் இரண்டாவது ரயில் ஆகும். அதேநேரம் தமிழகத்திற்குள் மட்டும் இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் சென்னை கோவை ரயில் ஆகும்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications