சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி மே 26ல் தமிழகம் வருகை.. நேரில் சந்தித்து கோரிக்கை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்

மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க மே 26ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையின் போது அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    #BREAKING வரும் 26ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

     அக்னி நட்சத்திரத்திற்கு லீவு விட்ட வானிலை...வெப்பச்சலனத்தால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை அக்னி நட்சத்திரத்திற்கு லீவு விட்ட வானிலை...வெப்பச்சலனத்தால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை

    தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா கடந்த ஜனவரி 12ம் தேதி நடைபெற இருந்தது. இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வரவிருந்தார்.

    மோடி தமிழகம் வருகை

    மோடி தமிழகம் வருகை

    விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளைத் தாண்டி அன்றைய தினத்தில் தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா உள்ளிட்டவற்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால், அப்போது அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது.

    மே 26ல் சென்னை வரும் மோடி

    மே 26ல் சென்னை வரும் மோடி

    இந்தநிலையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க அவர் தமிழகம் வருகிறார். இந்நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி

    நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி

    சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, ஒசூர்-தருமபுரி இடையேயான 2ம் மற்றும் 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி.

    மதுரை - போடி அகல ரயில் பாதை

    மதுரை - போடி அகல ரயில் பாதை

    மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், போடி முதல் மதுரை வரையிலான ரயில் சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

     மோடியை சந்திக்கும் மு.க ஸ்டாலின்

    மோடியை சந்திக்கும் மு.க ஸ்டாலின்

    பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Prime Minister Modi will arrive in Tamil Nadu on May 26 to attend a function in Chennai. It has been reported that the Chief Minister will meet the Prime Minister during his visit and put forward demands including the cancellation of the Sri Lankan Tamil issue and NEET examination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X